Showing posts with label aijth car. Show all posts
Showing posts with label aijth car. Show all posts

அஜீத்தின் குட்டி விமானம்

   அஜீத்துக்கு  குட்டி விமானங்களை இயக்குவதில் அலாதி பிரியம். வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த குட்டி விமானத்தில் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள பீச்சில் விமானம் ஓட்டுவது அவரது பொழுது போக்கு. 
  
ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து வைத்துவிடுவாராம். அதை மீண்டும் பொறுத்த சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பொறுமையாக இதை உருவாக்கி ஓட்டுகிற வரைக்கும் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கவென்றே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாம்.
தனது விமான ஆசையை ஒருத்தருக்கும் தொல்லை கொடுக்காமல் அனுபவிக்கதான்  மினி ஏரோ டிராம் கடுகிறார் என்கிறார்கள்.

அஜீத்துடன் நடிக்க மறுக்கும் நடிகை

    ஷாலினி மாதிரியே குழந்தை நட்சத்திரத்திலிருந்து நாயகியாகியிருக்கிறார் அவரது தங்கை ஷாம்லி.  ஷாலினி மாதிரியே இவருக்கும் வாய்ப்புகள் வருகிறது.
ஆனால் அவர் மாதிரி இவர் இல்லை.  படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். 
    ஓய்’என்ற தெலுங்கு படத்தில் மட்டுமே  நடித்திருக்கிறார். சிங்கப்பூரில் படிக்கப்போகிறாராம்.  அதுக்கு முன்னே ஒரு படத்தில் மட்டும் நடிக்கப்போகிறாராம். 

கிளாமர் விசயத்தில் அக்கா மாதிரி இருக்கமாட்டாராம்.  கதைக்கு தேவைப்பட்டால்  கிளாமராக நடிப்பாராம்.

ஆனால்
எக்காரணம் கொண்டும் தனது அக்கா கணவர் அஜீத்துடன் மட்டும் நடிக்க மாட்டாராம்.
’’அஜீத் அத்தான் மட்டுமல்ல; எனக்கு சகோதரர். அதனால் அவர் கூட மட்டும் நடிக்க மாட்டேன்’’என்கிறாராம்.